மூல வியாதி--Piles

மூலம் என்றால் என்ன?

  • ஆசன வாயில் உள்ள இரத்த குழாய்களின் புடைப்பே மூலம்.

அதன் வகைகள் என்ன?

  • உள்மூலம் மற்றும் வெளிமூலம்

உள் மூலம்

  • இதில் நான்கு நிலைகள் உள்ளன மூலத்தின் வீக்கம் மற்றும் அது எவ்வளவு இறங்கி வெளி வருகிறது என்பதை பொறுத்து 1-4 நிலைகள் உள்ளன.
  • 4வது நிலையில் மூலம் முற்றிலும் வெளியே வந்து விடும்-இதுவே கடைசி நிலையாகும்—Prolapsed Piles

நோயின் வெளிப்பாடுகள்

  • இரத்த கசிவு
  • சதை வெளியே வருதல்
  • சளி போன்ற திரவம் வருதல்
  • அதிகமாகும் மலச்சிக்கல்
  • பெரும்பாலும் வலி இருக்காது

நோய் ஏன் வருகிறது?

  • மலச்சிக்கல்
  • அதிக அசைவ உணவு உட்கொள்தல்
  • புகை மற்றும் மதுப் பழக்கம்
  • அதிக உடல் பருமன்
  • தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதிகள்
  • மலக்குடல் நரம்பு/ தசை கோளாறு

நோயை எப்படி குணப் படுத்துவது?

  • 1-2 வது நிலை வரை லேசர் சிகிச்சை சிறந்தது
  • 3-4 வது நிலை மூலத்திற்கு MIPH என்ற ஸ்டாப்ளர் சிகிச்சை–Stapler Surgery—சிறந்தது.
  • ஓபன் சர்ஜரி பெரும்பாலும் தேவை இல்லை.

மருந்துகள் உண்டா?

  • இரத்த கசிவை நிறுத்த, மலச்சிக்கலை சரி செய்ய மருந்துகள் உண்டு.
  • 1வது நிலை ஆரம்பித்து சில நாட்களே ஆகி இருந்தால் 2 வாரம் மருந்து கொடுத்து குணப்படுத்தலாம், மற்றபடி மருந்துகளுக்கு வேலை இல்லை.

லேசர் சிகிச்சை

  • இதில் மருத்துவமனையில் ஒரு நாள் இருந்தால் போதும்
  • ஆசன வாய் மரத்து போக ஊசி போட்டு செய்வதால் மற்ற வகை மயக்க மருந்து தேவை இல்லை
  • தையல் இல்லை, இரத்த சேதாரம் இல்லை
  • 3-5 நாட்களுக்குள் வேலைக்கு செல்லலாம்

ஸ்டாப்லர் சிகிச்சை

  • 3-4 வது நிலை மூலத்திற்கு செய்ய படுவது.
  • இதில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட டைட்டானியம் என்ற உலோகத்தால் செய்யப் பட்ட Disposable Stapler கருவியால் சிகிச்சை செய்யப்படுகிறது.
  • இதில் மூலம் தையல் இன்றி மொத்தமாக எடுக்கப்படும்
  • மருத்துவமனையில் ஒரு நாள் இருந்தால் போதும்
  • இரத்த இழப்பு, வலி மிக குறைவாக இருக்கும்
  • திரும்ப வரும் வாய்ப்பு இல்லை