குடல் ஒட்டு என்றால் என்ன?

நமது வயிற்றில் பல்வேறு காரணங்களால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

அவ்வாறு செய்யும் அறுவை சிகிச்சைகள் வயிற்றில் சீழ் பிடித்த நிலைக்கு செய்திருந்தாலோ அல்லது இரத்த கசிவு அறுவை சிகிச்சை சமயத்தில் அதிகம் ஏற்பட்டிருந்தாலோ பிற்காலத்தில் அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தழும்பின் அடியில் குடலோ அல்லது குடலின் மேல் உள்ள கொழுப்போ போய் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு 100ல் 5 % உண்டு. அவ்வாறு ஒட்டிக் கொள்ளுதல், ஆபரேஷன் செய்த ஏழு நாள்களில் இருந்து எத்தனை வருடம் கழித்தும் நோய் வெளிப்படலாம்.

நோயின் வெளிப்பாடுகள் என்ன?

அடிக்கடி வயிற்று வலி, வயிறு உப்புசம், தீடீர் தீடீர் என வாந்தி-பேதி, காற்று சரியாக பிரியாமல் இருப்பது போன்றவற்றை கூறலாம்.

இதை எப்படி கண்டுபிடித்து குணப்படுத்துவது?

குடல் ஒட்டு என சந்தேகம் மருத்துவருக்கு ஏற்ப்பட்டால் வயிருக்கான ஸ்கேன் செய்து வேறு வியாதிகள் இல்லை என தெரிந்து கொள்வார்.

குடல் ஒட்டு எந்த ஸ்கேனிலும் தெளிவாக தெரியாது. அதை கண்டு பிடிக்கவும் அதை குணப்படுத்தவும் லேப்ராஸ்கோபி என்ற நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இதில் குடல் ஒட்டுவை துல்லியமாக கண்டறிந்து நீக்கிவிடலாம். மீண்டும் வராமல் தடுக்க SALINE OR ICODEPT என்ற மருந்தை அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றுக்குள் ஊற்ற வேண்டும் , மேலும் Collagen Sheet என்ற செயற்கை திசு படிவையும் குடலின் மேல் வைத்து விட்டால் பின்னர் திரும்பவும் குடல் ஒட்டு வராது.