பித்தப்பை கற்கள்

பித்தப்பையின் அமைப்பு

  • ஈரலின் கீழே ஒட்டிக் கொண்டு இருக்கும்
  • பிரதான பித்தப் பாதையுடன்[common bile duct] ஒரு சிறிய இணைப்பு குழாய் வழியே [cystic duct] சேருகிறது.
  • சிறிய இரத்த குழாய் வழியே [cystic artery] இரத்தம் கிடைக்கிறது

பித்தப்பையின் வேலை

  • மனிதர்களுக்கு பித்தப் பை தேவையில்லை
  • நாள் ஒன்றுக்கு 100மிலி பித்தம் மட்டுமே பித்தப்பையில் தங்கும்/li>
  • ஜீரண வேலைகளை ஈரல் தான் செய்கிறது

பித்தப்பை கற்கள் ஏன் வருகிறது?

  • பித்தப்பை தனது சுருங்கி விரியும் தன்மையை இழக்கும் போது தங்கி விடும் பித்தம் கற்களாக உருமாறுகிறது.
  • சில நேரங்களில் E.Coli/ Typhoid கிருமிகளாலும் வரலாம்.
  • சில வகையான இரத்த சோகை நோயாலும், உடல் பருமனாலும் வருகிறது.

பித்தப்பை நோயின் வெளிப்பாடுகள்?

  • வலது பக்க வயிறு வலி
  • பசியில்லாமல் இருப்பது
  • ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம்
  • சில நேரங்களில் தொல்லையே இல்லாமலும் இருக்கலாம்—incidental gallstones

பித்தப்பை கற்கள் எப்படி கண்டறிவது?

  1. USG Abdomen
  2. MRCP
  3. ERCP
  4. TC 99scan—Bullida Scan
  5. Liver Function tests